Breaking News

நேரத்திற்கு ஏற்ப மின் கட்டணம் மாற்றம் .. மத்திய அரசின் புதிய நடைமுறை முழு விவரம்

அட்மின் மீடியா
0

நேரத்திற்கு ஏற்ப வெவ்வேறு மின் கட்டணம் வசூலிக்கும் வகையில் மின் நுகர்வோருக்கான விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது மின்தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் 10 முதல் 20 சதவிகிதம் வரை கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் மேலும் சூரிய ஒளி கிடைக்கும் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு 10 முதல் 20 சதவிகிதம் கட்டணத்தை குறைக்கலாம் எனவும் இந்த புதிய கட்டண நடைமுறை 2024 ஏப்ரல் 1 முதல் வணிக மற்றும் தொழில்துறைக்கு  அமலாகின்றது என மத்திய அரசு அறிவித்துள்ளது



ஏப்ரல் 2024-ம் ஆண்டு முதல் 10 கிலோ வாட் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகபட்ச தேவை கொண்ட வணிகம் மற்றும் தொழில் துறை நுகர்வோருக்கும் , 2025 ஏப்ரல் 1 முதல் விவசாய நுகர்வோர் தவிர மற்ற அனைத்து நுகர்வோருக்கும் டைம் ஆப் டே கட்டணம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் ஒரே விகிதத்தில் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிப்பதை விட, மின்சாரத்திற்கு செலுத்தும் விலை நாளின் நேரத்திற்கு ஏற்ப மாறுபடுவதே டிஓடி டைம் ஆப் டே ஆகும் 

இந்த கட்டண முறையின் கீழ், சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் நேரங்களில் வசூலிக்கப்படும் கட்டணம், தற்போது நாள் முழுவதும் வசூலிக்கப்படும் சாதாரண கட்டணத்தை விட 10% -20% குறைவாக இருக்கும். 

இந்த டிஓடி நேரம், ஒரு நாளில் 8 மணி நேரம் என்ற அளவில் மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையம் குறிப்பிடும் நேரத்தைப் பொறுத்தது. 

அதே நேரத்தில், மற்ற மின்சாரத்தை பயன்படுத்தும் உச்ச நேரங்களில் கட்டணம் 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும்.

2024 ஏப்ரல் 1 முதல் 10 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகபட்ச தேவை கொண்ட வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு டிஓடி கட்டணம் பொருந்தும். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback