Breaking News

மாவட்டம் வாரியாக மூடப்பட உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை முழு விவரம்

அட்மின் மீடியா
0

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 31.03.2023 அன்றுள்ளபடி 5329 மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவதில் 500 மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 




தமிழ்நாட்டில் 500 மதுபான சில்லறை கடைகள் மூடப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி 500 மதுக்கடைகளை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், தமிழகத்தில் 500 மதுபான சில்லறை கடைகள் நாளை முதல் மூடப்படுகிறது என்று தமிழக அரசு இன்று அறிவித்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

சென்னை மண்டலத்தில் 138, டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்

மதுரையில் 125,டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்

திருச்சியில் 100, டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்

கோவையில் 78 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்

சேலத்தில் 59 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்

வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

வேலூர் மாவட்டத்தில் இயங்கிவரும்

1.கடைஎண்:11034-சுண்ணாம்புபட்டறை, குடியாத்தம்வட்டம். 

2. கடைஎண்:11041-எண்:168, மேல்பட்டி ரோடு, சந்தப்பேட்டை, குடியாத்தம் வட்டம்,

3.கடைஎண்:11046-பேப்பர் ரோடு, எம்.ஆர்.எப் கம்பெனி அருகில், சுடுகாட்டு வழி,வேலூர்.

4. கடைஎண்:11117-வன அலுவலகம் எதிரில், பேருந்து நிலையம், ஒடுகத்தூர்,அணைக்கட்டு வட்டம்

5.கடைஎண்:11245-சென்னை-சித்தூர் ரோடு, திருவலம், காட்பாடி வட்டம்.

6.கடைஎண்:11340-எண்:5/1, அமிர்தி மெயின் ரோடு, பென்னாத்தூர், வேலூர் வட்டம்.

மேற்கண்ட 6 மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் தேர்வு செய்து அவற்றை 22.06.2023 அன்று முதல் மூடிட முடிவு செய்து மேற்படி 6 மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் 22.06.2023 முதல் நிரந்தரமாக செயல்படாது என மாவட்ட ஆட்சியர் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback