Breaking News

தமிழக காவல்துறை தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்!

அட்மின் மீடியா
0

தமிழக டிஜிபியாக பொறுப்பு வகிக்கும் சைலேந்திரபாபு நாளையுடன் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்பொழுது சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழக காவல் துறையின் புதிய தலைவராகவும், சட்டம் – ஒழுங்கு டிஜிபியாகவும் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழக காவல் துறையின் தலைவராக இருக்கும் டி.ஜி.பி சி.சைலேந்திரபாபு அவர்கள் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். 

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.,யாக சென்னை காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சங்கர் ஜிவால் தமிழக காவல் துறையின் புதிய தலைவராகவும், சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.,யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சங்கர் ஜிவால் 

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால்  1990-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியாவார்

இன்ஜினீயரிங் படித்து முடித்ததும் சிலகாலம் பொறியாளராக பணியாற்றினார். பின்னர் யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று தமிழக பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானார். தற்போது தமிழக டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback