Breaking News

அரசியல்வாதிகளை கோயில் அறங்காவலர்களாக நியமிக்க கூடாது சென்னை உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

அறங்காவலராக நியமிக்கப்படுபவர் ஆன்மிகவாதியாகவும், பக்தராகவும் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



தமிழக கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு 2021-ம் ஆண்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இதில் சில உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது

அதில் கோயிலின் அன்றாட நிர்வாகத்தில் அறங்காவலர்கள் முக்கிய பங்கு வகிப்பதால், அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே அறங்காவலர்களை நியமிக்கக் கூடாது. அறங்காவலராக நியமிக்கப்படுபவர் ஆன்மிகவாதியாகவும், பக்தராகவும் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளை நியமிப்பதை தவிர்க்க வேண்டும். அறங்காவலர்களின் நியமனம் பக்தர்களின் பங்களிப்புடன், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்

அதேபோல்  கோயில் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தது.மேலும் கோயில்களின் நிதி சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் செலவு உள்ளிட்ட கணக்குகளை மத்திய குழு தணிக்கை செய்கிறது இதனால் மாநிலத்தின் உரிமை பாதிக்கப்படாது என்றும் உத்தரவிட்டு, அரசின் மறு ஆய்வு மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback