புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை நடிகர் விஜய் ஆண்டனி அறிவிப்பு
புற்றுநோய் சிகிச்சைக்கு புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை நடிகர் விஜய் ஆண்டனி அறிவிப்பு
நடிகர் விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, தயாரித்த பிச்சைக்காரன் 2 படம் இம்மாதம் 16 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் ஆந்திரா மாநிலம் ராஜமகேந்திரவரத்தில் உள்ள உள்ள ஜிஎஸ்எல் புற்றுநோய் மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட மேமோகிராபி பிரிவை திறந்து வைத்தார். அதன் பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்
அதன்பின்பு விஜய் ஆண்டனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளுக்கு நல்ல செய்தி கூறினார்.புற்றுநோயாளிகள் யாருக்காவது ஏதேனும் சிகிச்சை தேவைப்பட்டால், அவரைத் தொடர்பு கொள்ளலாம். சிகிச்சை அளிக்க முடியாமல் சிரமப்படும் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என உறுதியளித்தார்.
புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி தேவைப்படுவோர், antibikiligsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் என அறிவித்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி!
Tags: தமிழக செய்திகள்