Breaking News

கோவை முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம் காரணம் என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த ஷர்மிளா இவருக்கு வயது 25 இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் செல்லக்கூடிய தனியார் பேருந்து ஓட்டுநராக பணி புரிந்து வருகின்றார்

 


கோவை மாநகரின் முதல் பெண் ஓட்டுநராக மாறியுள்ள ஷர்மிளாவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள், சமூக ஓட்டுனர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்

இந்நிலையில் இன்று திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட எம்.பி.யுமான கனிமொழி அவர்கள் கோவை காந்திபுரத்தில் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் செய்து அவரை பாராட்டினார்.

இது குறித்து ஷர்மிளா செய்தியாளர்களை சந்தித்த போது

இன்று தனது தந்தையுடன் பேருந்து உரிமையாளரை அலுவலகத்தில் சந்தித்தேன். அப்போது தான் விளம்பரத்திற்காக பேருந்தில் ஆள்களை ஏற்றுவதாக பேருந்தின் உரிமையாளர் பேசியதாக கூறினார்

இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்படியென்றால் உன் மகளை கூட்டிக்கொண்டு செல் என உரிமையாளர் தெரிவித்ததால், தானும் , தனது தந்தையும் அங்கிருந்து வந்துவிட்டோம் என ஷர்மிளா தெரிவித்தார்.
 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback