Breaking News

இனி டிவிட்டர் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எப்படி முழு விவரம்

அட்மின் மீடியா
0

டிவிட்டர் ப்ளூடிக் பயனர்களுக்கு மூலம் இனி விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.

 


சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் டிவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களில் முக்கியமானவரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல மாற்றங்களை செய்து வருகின்றார்

ப்ளூ டிக் பயனர்களுக்கு ரூ.900 சந்தா கட்டணம். 

டிவிட் எழுத்துக்கள் அதிகரிப்பு

ிவிட் செய்ததை எடிட் செய்யும் வசதி

வாட்ஸப் போல் ஆடியோ, வீடியோ கால் பேசும் வசதி 

புதிய தலைமை அதிகாரி

என பல மாற்றங்கள் செய்த அவர் தற்போது புதிய அறிவிப்பாக டிவிட்டரில் ப்ளூ டிக் வாங்கியுள்ள அதிகாரபூர்வ கணக்கு வைத்து இருக்கும் பயனர்கள்  மெசேஜ் பகுதியில் விளம்பரங்கள் காட்டப்படும். அந்த விளம்பரத்தின் வியூஸ் பொறுத்து அவர்களுக்கு டிவிட்டர் பணம் கொடுக்க உள்ளது 

இதற்காக, 5 மில்லியன் அமெரிக்கன் டாலரை டிவிட்டர் நிர்வாகம் ஒதுக்கியுள்ளது. இனி யூ-டியூப் போல டிவிட்டர் பக்கத்திலும் ப்ளூ டிக் பயனர்கள் காசு சம்பாதிக்கலாம்.

Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback