Breaking News

அதிவேகம் ஆபத்தானது என்பதற்க்கு உதாரணம் தூக்கி வீசப்பட்ட பைக்!! தந்தை பலி!! மகன் கவலைக்கிடம்!! அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

கோவை கே.ஜி.சாவடி பகுதியில் நடந்த கோர விபத்து.. மகனை கபடி போட்டிக்கு அழைத்து வந்த தந்தை உயிரிழப்பு 15 வயது மகன் அஜ்மல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி



கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வசித்து வருபவர் ஜாகிர் உசேன்.இவர் தன்னுடைய மகன் 15 வயது அஜ்மலை திருச்சியில் நடைபெறும் கபடி போட்டியில் பங்கு பெறுவதற்காக பயிற்சியாளரிடம் கொண்டு போய் விட தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் தனது மகனை ஏற்றிக்கொண்டு  கே.ஜி.சாவடி பகுதியில்  சென்றுகொண்டிருந்தபோது 

அப்போது அதே சாலையில் எதிரே அதி வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.இந்த கோர விபத்தில் தந்தை ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்அவருடைய மகன் அஜ்மல் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/spinesurgeon/status/1672914642614759425/video/2

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback