Breaking News

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி


அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம் மேலும் அமலாக்க பிரிவு நியமிக்கும் மருத்துவர்கள் குழுவும் ஆராயலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நேற்று அதிகாலை 2 மணி அளவில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். மருத்துவர்களின் ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனியின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அத்துடன் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். 

இதற்க்கிடையில் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு உத்தரவிட்டது.

மேலும் விசாரணைக் கைதியாக உள்ள செந்தில் பாலாஜிக்கு சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றது

இந்த நிலையில் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback