சென்னை மக்களே பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாம் முழு விவரம்
நாளை ஜூன் 6ம் தேதி மற்றும் 7 ம் தேதி சென்னையில் பட்டாமாறுதலுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது . இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையில் அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உட்பட 6 வட்டங்களுக்கு உட்பட்ட பகுதியில் பட்டாமாறுதலுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி பட்டா மாறுதல் குறித்த அனைத்து குறைகளையும் மனுக்களாக கொடுத்து தீர்வு பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்
சென்னை மாவட்டத்தில் உள்ளஅம்பத்துார், மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், சோழிங்கநல்லுார் மற்றும் ஆலந்துார் ஆகிய 6 வட்டங்களுக்கு 1432ம் பசலிக்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு மேற்குறிப்பிட்டுள்ள வட்டங்களில் ஜீன் 06 2023 தொடங்கி ஜூன் 07 2023 வரை நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.சு.அமிர்த என ஜோதி, எஇ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
அறிவிப்புசென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்துார், மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், சோழிங்கநல்லுார் மற்றும் ஆலந்துார் ஆகிய 6 வட்டங்களுக்கு மட்டும் 1432 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு கீழ்க்குறிப்பிட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களாலும் 06.06.2023 முதல் தொடங்கி 07.06.2023 வரை நடத்தப்படும்.
அம்பத்தூர்
திருமதி.சு.அமிர்தஜோதி,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர்,
சென்னை மாவட்டம்
06.06.2023- செவ்வாய்க்கி ழமை 07.06.2023-புதன்கிழமை
மாதவரம்
திரு.கு.குலாம் ஜீலானி B.Sc., பாபா,
மாவட்ட வருவாய் அலுவலர் சென்னை மாவட்டம்
06.06.2023- செவ்வாய்க்கிழமை 07.06.2023-புதன்கிழமை
திருவொற்றியூர்
திரு.R.ரெங்கராஜன்
வட சென்னை வருவாய் கோட்ட அலுவலர்,சென்னை
மதுரவாயல்
செல்வி.A.K.பிரவீனா குமாரி மத்திய சென்னை வருவாய் கோட்ட அலுவலர், சென்னை
06.06.2023- செவ்வாய்க்கி ழமை 07.06.2023-புதன்கிழமை
சோழிங்கநல்லூர்
திரு.R.அருளானந்தம் தென் சென்னை வருவாய் கோட்ட அலுவலர்,சென்னை
06.06.2023-செவ்வாய்க்கிழமை 07.06.2023-புதன்கிழமை
ஆலந்தூர்
திருமதி.A.கௌசல்யா மாவட்ட ஆய்வுக்குழும் வருவாய் தீர்வாயம் அலுவலர், சென்னை
06.06.2023-செவ்வாய்க்கிழமை07.06.2023-புதன்கிழமை
மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தினமும் காலை 9 மணி அளவில் பட்டா மாறுதல் மற்றும் பொது மக்களின் இதர குறைகள் சம்மந்தமான மனுக்களை சம்மந்தப்பட்ட வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சு.அமிர்த ஜோதி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்