பொது சிவில் சட்டம் குறித்து அனைவரும் கருத்து தெரிவியுங்கள் ஜமாஅத்துல் உலமா சபை
அட்மின் மீடியா
0
பொது சிவில் சட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கும் சட்ட ஆணையம்
பொது சிவில் சட்டம் பற்றி தங்களது கருத்துகளை, மத அமைப்புகள் 30 நாட்களுக்குள் membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சலில் சமர்ப்பிக்கலாம் என இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது
கருத்து தெரிவிக்க:-
பொது சிவில் சட்டம் என்றால் என்ன:-
இந்தியாவில் குற்றவியல் நடவடிக்கைக்கான சட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியா முழுக்க அனைவருக்கும் ஒன்றுதான். அதாவது கொலை, கொள்ளை போன்ற குற்றவியல் சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் ஒரே தண்டனை தான். ஆனால், திருமணம், விவாகரத்து, பரம்பரை, தத்தெடுப்பு போன்ற அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அனைத்து மதச் சமூகங்களுக்கும் பொருந்தும் படி அவரவர் மதங்களுக்கு பல்வேறு சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.
அதாவது, தனிநபர்களுக்கான சிவில் சட்டம் மதங்களுக்கு மதம் மாறுபடும். இப்படி இந்தியாவில் உள்ள, பல்வேறு சிவில் சட்டங்களை நீக்கி, அனைத்து தரப்பினருக்கும் ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பாஜக உள்ளிட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், பல்வேறு மதங்களை உள்ளடக்கிய இந்தியா போன்ற நாட்டில் பொது சிவில் சட்டம் என்பது சரியாக இருக்காது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டி நெறிமுறைகளின் கீழ் உள்ள 44வது பிரிவில் “இந்தியா முழுமைக்கும் குடிமக்கள் ஒரே விதமான பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம்” எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
Law Commission of India solicits views & ideas of the public and recognized religious organizations about Uniform Civil Code The 22nd Law Commission of India is inter alia examining the Uniform Civil Code, a reference sent by the Ministry of Law & Justice. Initially the 21st Law Commission of India had examined the subject on Uniform Civil Code and solicited the views of all the stakeholders through its appeal along with a questionnaire dated 07.10.2016 and further public appeals/notices dated 19.03.2018, 27.03.2018 and 10.4.2018. Pursuant to the same, overwhelming responses have been received by the Commission.
The 21st Law Commission has issued the consultation paper on “Reforms of Family Law” on 31.08.2018. Since more than three years have been lapsed from the date of issuance of the said Consultation Paper, bearing in mind the relevance and importance of the subject and also the various Court orders on the subject, the 22nd Law Commission of India considered it expedient to deliberate afresh over the subject.Accordingly, the 22nd Law Commission of India decided again to solicit views and ideas of the public at large and recognized religious organizations about the Uniform Civil Code.
Those who are interested and willing may present their views within a period of 30 days from the date of Notice through “click here” button or by Email at membersecretary-lci[at]gov[dot]in to the Law Commission of India. என செய்தி வெளியிட்டுள்ளது
21வது சட்டக் கமிஷன் UCC தொடர்பான விஷயத்தை மதிப்பாய்வு செய்து, ஜூலை 10, 2016 அன்று ஒரு கேள்வித்தாள் மற்றும் பொது அறிவிப்புகளுடன் அதன் மேல்முறையீடு மூலம் கருத்துக்களையும் கோரியது.
2018 ஆம் ஆண்டு மார்ச் 19, மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 10.வந்த பதில்களை' கவனத்தில் கொண்டு, 22வது சட்ட ஆணையம் மீண்டும் UCC பற்றி பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளின் கருத்துகளையும் யோசனைகளையும் பெற முடிவு செய்துள்ளது.
அரசியலமைப்பின் 44 வது பிரிவு, மாநில கொள்கையின் வழிகாட்டுதல் கொள்கைகளில் ஒன்றாகும், இது ஒரு சீரான சிவில் குறியீட்டை பரிந்துரைக்கிறது. ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள், அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள், மின்னஞ்சல் மூலமாகவோ இந்திய சட்ட ஆணையத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்"என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ப
ொது சிவில் சட்டம் குறித்து ஜமா அத்துல் உலமா சபை அறிக்கை:-
கண்ணியமிகு ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட, வட்டார நிர்வாக பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து ஆலிம் பெருமக்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியமிகு ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட, வட்டார நிர்வாக பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து ஆலிம் பெருமக்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்தும் பதிவு செய்யப்பட்ட மத அமைப்புகளிடமிருந்தும் சட்ட ஆணையம் கருத்து கேட்டிருப்பதும் அதை ஒரு மாதத்துக்குள் (14.07.2023) அனுப்ப வேண்டும் என கூறியிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்.
இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு கீழ்காணும் ஐந்து விஷயங்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றை முழுமையாகவோ இவற்றில் சிலவற்றையோ இதற்குரிய (ONLINE FORM ல் ONLINE FORM LINK இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.) தகவலை பதிவேற்றம் செய்ய வேண்டிய இடத்தில் டைப் செய்தோ அல்லது PDF ஆகவோ பதிவேற்றம் செய்து அனுப்பவும்.
இது பொதுமக்கள் ஒவ்வொருவரும் அனுப்புவதற்கானது. இதற்கான விழிப்புணர்வை ஒவ்வொரு மஸ்ஜிதின் இமாம் அவர்கள் ஜும்ஆ மற்றும் ஈதுல் அழ்ஹா பெருநாள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்து மீண்டும் மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவை முறையாக நடைபெறுவதை மாவட்ட மற்றும் வட்டார நிர்வாகங்கள் தொடர் அக்கறை எடுத்து உறுதி செய்ய வேண்டும்.
நம்முடைய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் பொதுச்சிவில் சட்டம் ஏன் தேவையில்லை என்பதை மிகத் தெளிவாக விரிவாக விளக்கி இந்திய சட்ட ஆணையத்திடம் இன்ஷா அல்லாஹ் தனது கருத்தை தெரிவிக்கும்.
NO NEED OF UNIFORM CIVIL CODE FOR SOME OF THE FOLLOWING MAIN REASONS
1. Article 25 Guarantees Right to Freedom of Religious Practice, so practicing personal laws cannot be interferred even by the State.
2. UCC is against the Spirit of the Secular Character of our Constitution.
3. Indian Legal System is based on pluralism and the application of UCC will result in its complete destruction.
4. The Parliamentary System of India itself is in the model of Unity in Diversity. So, UCC cannot exist in parallel.
5. The Supreme Court of India has time and again upheld the Constitutional Validity of Personal Laws over UCC.
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி