Breaking News

ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழக்கியுள்ளது. 

2010-ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தகுதித் தேர்வு கட்டாயமில்லை

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம்; நேரடி நியமன ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வை கட்டாயமாக்கிய தமிழ்நாடு அரசின் விதி ரத்து

கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011-ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், 2011-ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஆசிரியர்கள் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என உத்தரவிட்டது. 

ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என தீர்ப்பளித்துள்ளனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback