Breaking News

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரமுடியாது… அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுனர் ஒப்புதல்.!

அட்மின் மீடியா
0

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரமுடியாது… இலாகா மாற்றத்திற்கு ஆளுனர் ஒப்புதல்.!

 


மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். மேலும் அவரை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யவும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடரவும் ஆளுநரிடம் பரிந்துரை செய்திருந்தார். 

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த இரு துறைகளான மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறைகளை, இரு வேறு அமைச்சர்களுக்கு மாற்றிக்கொடுக்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். 

நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சார துறையும், வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு மது விலக்கு ஆயத்தீர்வை துறையும் கூடுதல் பொறுப்பாக அளிக்க ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்

மேலும் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார்.

செந்தில் பாலாஜி குற்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருவதால் தார்மீக அடிப்படையில் அவர் அமைச்சராக தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback