மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை முழு விவரம்
மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுகிறது. இதனால் அரசின் உத்தரவை முறையாக பின்பற்றதாக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, இதனை மீறி மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் சம்மந்தப்பட்ட கல்லூரி மற்றும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்