Breaking News

Biparjoy Cyclone அதி தீவிர புயலான பிபோர்ஜாய் புயல் 15-ந்தேதி கரையை கடக்கும் புயல் கடக்கும் பாதை சாட்டிலைட் வியூ பார்க்க

அட்மின் மீடியா
0

அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் நாளுக்கு நாள் வலுப்பெற்ரு வருகின்றது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இப்புயலுக்கு பிபோர்ஜோய் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிபோர்ஜோய் புயல் 15 ம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜூன் 15ம் தேதி பாகிஸ்தான் மற்றும் அதனை ஒட்டிய சவுராஷ்டிரா, கட்ச் கடற்கரை பகுதிகளை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


புயல் தற்போது எங்கு உள்ளது என சாட்டிலைட் வியூ பார்க்க:-

https://www.windy.com/?12.900,80.221,5

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback