Breaking News

40 கிமீ வேகத்தை தாண்டினால் அபராதமா!! சென்னை போக்குவரத்து போலீஸ் விளக்கம் speed limit 40km

அட்மின் மீடியா
0

சென்னையில் வாகன ஓட்டிகளின் வேக கட்டுப்பாட்டு அளவை மாற்றியமைக்க போக்குவரத்து காவல்துறை திட்டம்



சென்னை சாலைகளில் பகலில் 40 கி.மீ மேல் வானங்களில் வேகமாக செல்லக்கூடாது என்றும், இரவில்  50 கி.மீட்டருக்கு மேல் செல்லக்கூடாது என்றும் அதற்க்கு மேல் வேகமாக சென்றால் வேக கட்டுப்பாட்டு கருவி மூலம் தானாக அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில்:-

Owing to the criticism from certain quarters in social media and some confusions alleging that GCTP has proposed to generate challans for speed violations by the vehicles plying in Chennai city, it is clarified that GCTP installed six speed display boards wherein the speed of every vehicle crossing that board is displayed and the road user is able to know if he has crossed the permitted speed limit. 

These boards are for cautionary purpose and not equipped to generate challans. 10 more fixed speed ANPR cameras which are also capable of raising challans for speed violations are installed by GCTP but the data to be captured by these would be used only for study purposes and not for raising challans till a final decision is taken about permissible speed limits.

Possibility of exploring different speed limits in different roads at different times will also be explored along with the comparative study of speed limits in other metros.

அதாவது 

சென்னை மாநகரில் வாகனங்களின் வேகத்தை கண்டறிந்து அபராதம் விதிக்கும் வகையில் 'ஸ்பீட் டிஸ்பிளே' மற்றும் ஏஎன்பிஆர் வகை கேமராக்களை பொருத்தி உள்ளதாக செய்திகள் பரவுகின்றன.

சென்னையில் 6 இடங்களில் ஸ்பீட் டிஸ்பிளே போர்டுகளை நிறுவப்பட்டுள்ளது. இந்த போர்டை கடக்கும்போது ஒவ்வொரு வாகனங்களின் வேகமும் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் தான் அந்த வாகனங்கள் செல்கிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியும். 

இது வாகன ஓட்டிகளையும் எச்சரிக்கவும், வாகனங்கள் செல்லும் வேகங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் தான் பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல் 10க்கும் மேற்பட்ட ஏஎன்பிஆர் வகை கேமராக்கள் சென்னை போக்குவரத்து போலீசாரால் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் என்பது வாகனங்கள் செல்லும் வேகங்களை கணக்கீட மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. 

இந்த கேமராக்கள் மூலம் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.அந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் எவ்வளவு வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற வேகஅளவு நிர்ணயம் செய்யப்படும். 

இந்த வேக அளவு என்பது இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால் ஏஎன்பிஆர் வகை கேமராக்கள் மூலமும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படாது. இந்த கேமராக்கள் உள்ள பகுதியில் வாகனங்களின் வேகங்களை கண்டறிந்து சராசரி வேகம் கணக்கீட்டு வரும்காலத்தில் அங்கு வேகஅளவு நிர்ணயம் செய்யப்பட உள்ளது'' என விளக்கம் அளித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback