Breaking News

விமான விபத்தில் மாயமாகி 40 நாட்கள் அமேசான் காட்டில் உயிருடன் வாழ்ந்த 4 குழந்தைகள் பத்திரமாக மீட்ட ராணுவம்

அட்மின் மீடியா
0

பிரேசில் நாட்டின் அரராகுவாராவில் இருந்து கொலம்பியா நாட்டின் சான் ஜோஸ் டெல் குவேரியா நோக்கிச் மே 1 ம் தேதி சென்றுகொண்டிருந்த செஸ்னா 206 என்னும் விமானம் அமேசான் பகுதியில் இஞ்சின் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த விமானம் மணிக்கு 260 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. 6 இருக்கைகளை கொண்ட இது மிகவும் சக்தி வாய்ந்த ஒற்றை என்ஜின் அமைப்பை கொண்டிருக்கிறது



விமானி அவசரமாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, அவர்கள் உடனடியாக ராணுவத்திற்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர்.விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை ராணுவத்தினர் அடையாளம் கண்டிருக்கின்றனர். அந்த விபத்தில் குழந்தையின் தாய் தந்தை மற்றும் விமானியும் பலியாகினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அதில் பயனம் செய்த 4 குழந்தைகள் உயிர்பிழைத்துள்ளார்கள்.

விமான விபத்து சம்பவம் கேள்விபட்டு கொலம்பியா மீட்பு படையினர் அங்கிருந்து உயிரிழந்த மூவரின் உடலை, சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றினர். 

குழந்தைகள் உடல் கிடைக்காததால் விபத்திலிருந்து தப்பித்து அமேசானின் மழைக்காடுகள் நிறைந்த பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீவிரத் தேடுதல் வேட்டையைத் தொடங்கிய கொலம்பியா ராணுவம். 40 நாட்களுக்கு பிறகு 4 குழந்தைகளும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள் என்று கொலம்பிய ராணுவம் தெரிவித்துள்ளது

இந்த தேடுதல் வேட்டையில் முழு மூச்சாக இறங்கிய ராணுவத்தினருக்கும், அவர்களுக்கு வழிக்காட்டிய பழங்குடியினருக்கும் கொலம்பிய அதிபர் நன்றி தெரிவித்திருக்கிறார். 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback