அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது நேற்று காலைவலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெற்றது
இதனால் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்