ரெயில் விபத்தில் பலியான 288 பேரில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த 2 ஆம் தேதி இரவு ஒடிசாவில் பெங்களூர் - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதி விபத்திற்குள்ளாகின.மூன்று ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 288 பயணிகள் உயிரிழந்தனர்.
குறிப்பிட்ட ஒரு பெட்டியில் மட்டும் 40 உடல்கள் மீட்கப்பட்டன.மின்சாரம் தாக்கியதால் தான் 40 பேர் உயிரிழந்து இருப்பதாக கருதப்படுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தை சந்தித்தபோது 288 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளரகள் இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு பெட்டியில் மட்டும் 40 உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களது உடலில் எந்த காயமும் இல்லை. சிறு ரத்த துளிகூட வெளியேறவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் 40 பேரும் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகின்றது
கோர மண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தரம் புரண்டபோது எதிர்திசையில் வந்த பெங்களூரு-அவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது. அப்போது ரெயில்வே மின்கம்பங்கள் சாய்ந்தன. அதில் இருந்த மின்சாரம் தாக்கியதால் தான் 40 பேர் உயிரிழந்து இருப்பதாக கருதப்படுகிறது.
Tags: இந்திய செய்திகள்