27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் திடீர் மழை தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..
சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு, ஜூன் மாதத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், வேலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
சென்னையில் ஜூன் மாதத்தின் சராசரி மழையே 55மிமீ உள்ள நிலையில் ஒரே நாளில் மாத சராசரியை விட 3மடங்கு மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மழை காரணமாக ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடைசியாக சென்னையில் 1996ம் ஆண்டிற்கு பிறகு ஜூன் மாதத்தில் மழை காரணமாக தற்போது தான் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முன்னதாக 1991 மற்றும் 1996ம் ஆண்டுகளுக்கு பிறகு 2023ல் ஜூன் மாதத்தில் தான் வரலாற்றிலேயே அதிக மழை பெய்துள்ளதாக அவர் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்