Breaking News

ஒடிசா ரயில்கள் விபத்து உயிரிழப்பு 233 ஆக அதிகரிப்பு 1000க்கும் அதிகமானோர் காயம் மீட்பு பணிகள் வீடியோ Odisha train accident

அட்மின் மீடியா
0

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளானது ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.



கொல்கத்தாவில் நேற்று மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் எண் - 12842 ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பஹானாகா ரயில் நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் இரவு 7 மணியளவில் ரயில் வந்து கொண்டிருந்த போது,கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு, சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிவிபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் கோரமண்டல் ரெயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டன.தடம் புரண்ட விரைவு ரெயில் மீது எதிரே வந்த பெங்களூரு - ஹவுரா ரெயில் மோதியது. இதில் ஹவுரா ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன.மேலும், சரக்கு ரெயில் ஒன்றும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வனப்பகுதியில் விபத்து நடந்ததால் உடனடியாக யாருக்கும் தெரியவரவில்லை. ரயில் குறிப்பிட்ட நேரத்தில்  ஸ்டேஷனுக்கு வராதது குறித்து  விசாரணையில் விபத்து குறித்து தெரியவந்திருக்கிறது

உடனடியாக விபத்து நிகழ்ந்த இடத்துக்கு தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையினர், போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த விபத்தில் இதுவரை சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக ஒடிசாவின் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை 233  பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். 

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்புபணிகள் குறித்து கேட்டறிந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் மீட்பு மற்றும் உதவிப்பணிகளுக்காக அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு நாளை ஒடிசா செல்கின்றனர்

விபத்து குறித்து தொடர்பு கொள்ள அவசர கட்டுப்பாட்டு அறை 

பாலசோர் (ஒடிசா) +91 67822 62286 

ஹவுரா ஹெல்ப்லைன் - 033 26382217 

காரக்பூர் ஹெல்ப்லைன் - 8972073925, 9332392339, 

பாலசோர் ஹெல்ப்லைன் - 8249591559, 7978418322 

ஷாலிமார் ஹெல்ப்லைன் - 9903370746 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 044- 25330952, 044-25330953 & 044-2535477

மீட்பு பணிகள் வீடியோ:-

https://twitter.com/drapr007/status/1664658590517571584

https://twitter.com/_Hari_tweets/status/1664757649479532544

https://twitter.com/drapr007/status/1664662647726575617

https://twitter.com/iplbhakt/status/1664667699580993539

https://twitter.com/SUBHANK73376057/status/1664667650322997248

https://twitter.com/_RCBTweets04/status/1664656726694711296/video/1

https://twitter.com/JoeLenin8/status/1664764847102341120

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback