Breaking News

ஜூன் 17ல் மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வருகின்ற 17-06-2023 சனிக்கிழமை அன்று சென்னை நீலாங்கரையில் உள்ள "RK Convention Centre-ல்" 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு #தளபதிவிஜய் அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார். என அறிவிக்கப்பட்டுள்ளது


இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

வரும் 17ம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023ம் ஆண்டு நடந்து முடிந்த “10 மற்றும் 12-ஆம்” வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார் என தெரிவித்துள்ளார்

Tags: அரசியல் செய்திகள் கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback