Breaking News

12ம் வகுப்பு படித்தவர்கள் கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன்12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.




தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை ,நாமக்கல் ,திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை ,தேனி வீரபாண்டி ஆகிய ஏழு இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் செயல்படுகின்றதுஅந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவ படிப்பு நடத்தப்படுகின்றது

இந்நிலையில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு வருகிற 12-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க:-

https://tanuvas.ac.in./

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

30-06-2023


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback