12 ம் வகுப்பு படித்தவர்கள் JEE தேர்வு எழுதாமல் ஐஐடியில் ஆன்லைனில் படிக்க விண்ணப்பிக்கலாம்
JEE தேர்வு எழுதாமல் சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள இணையவழியிலான பிஎஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற நான்காண்டு பட்டப்படிப்புக்கு ஜூன் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்! இந்த படிப்பில் சேர JEE நுழைவுத்தேர்வு தேவையில்லை வயது வரம்பு கிடையாது
சென்னை ஐஐடியில் படிக்க ஜேஇஇ என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களே அங்கு பயில முடியும்
எலக்ட்ரானிக்ஸ் துறை வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில் பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற புதிய 4 ஆண்டுகால இணையவழி பட்டப் படிப்பை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பிஎஸ்சி இணையவழிப் பட்டப்படிப்புக்கு ஜேஇஇ தேர்வு எழுத வேண்டியதில்லை.வயது வரம்பும் கிடையாது பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்கள் படித்த யார் வேண்டுமானாலும் படிக்கலாம்
இந்தப் படிப்பை முடிப்பவா்கள் ஆட்டோமோட்டிவ், நுகா்வோா் மின்னணு பொருள்கள், மருத்துவ மின்னணு சாதனங்கள், பாதுகாப்பு தொழில் என பல்வேறு துறைகளில் எலக்ட்ரானிக்ஸ் பொறியாளராகவோ, வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பொறியாளராகவோ பணியை தொடங்கலாம்.
இந்த இணையவழி பட்டப்படிப்பானது, அடிப்படைப் பட்டம், டிப்ளமோ பட்டம், இளநிலைப் பட்டப்படிப்பு என மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அதாவது, மூன்று நிலைகளில் எந்தக் கட்டத்திலும் மாணவர்கள் வெளியேறி, அதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்க கடைசி நாள்:-:-
27.08.2023
Tags: கல்வி செய்திகள் வேலைவாய்ப்பு