Breaking News

கர்நாடகாவில் சபாநாயகராக முதல் முறையாக இஸ்லாமியர் யு.டி.காதர் பதவியேற்றார் வீடியோ இணைப்பு karnataka speaker U.T. Khader

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் சபாநாயகராக முதல் முறையாக இஸ்லாமியர் யு.டி.காதர் பதவியேற்றார் வீடியோ இணைப்பு

கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்று அதில் பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 135 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், புதிய சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்கு 5 முறை எம்எல்ஏ-வாக பதவி வகித்த யு.டி.காதரை காங்கிரஸ் கட்சி அறிவித்து சபாநாயகர்  பதவிக்கு காதர் வேட்பு மனு தாக்கல் செய்தார் அவருடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உடன் இருந்தனர். கர்நாடக சட்டப் பேரவையில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் சபாநாயகராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் புதிய சபாநாயகர் பதவிக்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யு.டி.காதர் மட்டும் நேற்று முன்தினம் மனு அளித்திருந்தார்.பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் யு.டி.காதர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவது உறுதியானது

யூ டி காதர் அவர்கள் கடந்த பாஜக ஆட்சியில் சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தார் 

இந்நிலையில் தற்காலிக சபாநாயகர் தேஷ்பாண்டே முன்னிலையில் நேற்று காலை 11 மணியளவில் 3-வது நாள் சிறப்பு கூட்டம் தொடங்கியது. அப்போது 16-வது சட்டசபையின் புதிய சபாநாயகராக யு.டி.காதர் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் யு.டி.காதரை முதல்-மந்திரி சித்தராமையா, டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர் சபாநாயகராக  பதவி ஏற்று இருப்பது கர்நாடக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

யு.டி.பரீத் மற்றும் நசீமா பரீத் தம்பதியின் மகனாக கடந்த 1969-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி பிறந்தார். 

பி.ஏ. மற்றும் எல்.எல்.பி. படித்துள்ளார். யு.டி.காதரின் தந்தை யு.டி.பரீத் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த 2007-ம் ஆண்டு இருந்தார். அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் யு.டி.காதர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்துறை மற்றும் உணவுத்துறை மந்திரியாகவும், 

கடந்த காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் நகர வளர்ச்சித்துறை மந்திரியாகவும், 

சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராகவும் யு.டி.காதர் இருந்திருந்தார்.

பதவியேற்ப்பு வீடியோ பார்க்க:-

https://twitter.com/DrAnjaliTai/status/1661300219693113350

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback