Breaking News

மீன் வளர்ப்புக்கு மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் fish farming government scheme

அட்மின் மீடியா
0

மீன் வளர்ப்புக்கு மானியத்துடன் கடன்.. காஞ்சிபுரம் ஆட்சியர் தகவல்!

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்கள் குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகத்தின் மூலம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற மீனவ பயனாளி, மீனவ விவசாயிகளிக்கு தெரிவிக்கப்படுகிறது.

குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தினில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.

ஒருங்கிணைந்த அலங்கார மீன் வளர்ப்பு அலகு (நன்னீர் மீன்களை இனப்பெருக்கம் மற்றும் வளர்த்தல்) ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தினில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.

புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம்மதிப்பீட்டில்அமைத்தல் திட்டத்தினில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது. 

புதிய மீன்வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தினில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.

நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களில் ரூ.4. லட்சம் மதிப்பீட்டில் மீன்வளர்த்திட உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது. 

சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் மீன் வளர்த்திட ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.

நன்னீர் மீன்வளர்ப்பிற்கான நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தினில் ஒரு அலகிற்கான செலவினமானரூ.14.00 லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது. 

குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம் வழங்கும் ரூ.73,721/- மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தினில் ஒரு அலகிற்கு பொது பிரிவினருக்கு40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.

எனவே இத்திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள்

காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்,

எண்1/269, கிழக்கு கடற்கரை சாலை, 

சின்ன நீலாங்கரை, 

சென்னை 600 115. 

(கைப்பேசி எண்.84891 89720) 

அலுவலகத்தை தொடர்பு கொண்டு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:-

இந்த திட்டம் அணைத்து மாவட்டங்களிலும் உள்ளது எனவே அந்த அந்த மாவட்டங்களில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்


biofloc fish farming government subsidy

fisheries scheme

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback