Breaking News

கர்நாடகா கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை நீக்குவோம் காங்கிரஸ் எம்எல்ஏ கனீஸ் பாத்திமா Congress Will Lift Hijab Ban Kaneez Fatima

அட்மின் மீடியா
0

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் குல்பர்கா வடக்கு தொகுதியில் நிறுத்தப்பட்ட முஸ்லீம் பெண் வேட்பாளர்  கனீஸ் பாத்திமா வெற்றி பாஜகவின் சந்திரகாந்த் பாட்டீலை தோற்கடித்து  2,712 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் கனீஸ் பாத்திமா முன்னாள் அமைச்சரும், மறைந்த கமர்-உல்-இஸ்லாமின் மனைவியும் ஆவார் , 



16வது கர்நாடக சட்டப்பேரவையின் முதல் அமர்வில், குல்பர்கா மக்களின் அன்பு மற்றும் நம்பிக்கையுடன் தொடர்ந்து 2வது முறையாக எம்எல்ஏவாக பதவியேற்றார்.

கர்நாடகாவில் ஹிஜாப் தடையை நீக்குவோம் என காங்கிரஸ் எம்எல்ஏ கனீஸ் பாத்திமா தெரிவித்துள்ளார் 

கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை காங்கிரஸ் நீக்கும் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ கனீஸ் பாத்திமா தெரிவித்துள்ளார்.

இறைவன் நாடினால், வரும் நாட்களில் ஹிஜாப் தடையை திரும்பப் பெறுவோம். அந்தப் பெண்களை மீண்டும் வகுப்பறைகளுக்கு அழைத்துச் செல்வோம், அவர்கள் தேர்வுக்கு வருவார்கள். அவர்கள் இரண்டு பொன்னான ஆண்டுகளை இழந்துவிட்டனர் என்று பாத்திமா கூறினார்.

ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை. சுதந்திர இந்தியாவில் நமக்கு சுதந்திரம் உள்ளது. மக்களின் ஆடைகளை பற்றி நாங்கள் கேள்வி கேட்பதில்லை. இந்தப் பிரச்சினைக்காக பெண்கள் கல்லூரிகளுக்குச் செல்வதைத் தடுக்கக் கூடாது” என்று ஹிஜாப் தடைக்கு எதிரான போராட்டங்களின் உச்சக்கட்டத்தில் பாத்திமா கூறியிருந்தார்.

news source:-

https://www.thequint.com/elections/karnataka-election/muslim-women-needed-in-politics-kaneez-fatima-karnataka-only-muslim-woman-mla

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback