Breaking News

கர்நாடக முதலமைச்சராக சித்தராமை துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

அட்மின் மீடியா
0

கர்நாடக முதலமைச்சராக சித்தராமை துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார்தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்


தற்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசுகையில், காங்கிரஸ் தலைமை கர்நாடக முதல்வராக சித்தராமையாவை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்

முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், அறிவிப்பு வெளியானது. 

மேலும் நாளை மறுநாள் மதியம் 12.30 மணிக்கு கர்நாடக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுவதாக இந்த பதவியேற்பு விழாவிற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்

துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள டி.கே.சிவகுமார் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம், மக்களின் நலன் மட்டுமே எங்களின் முக்கிய நோக்கம். மக்களின் நலன், எதிர்காலத்தை உறுதி செய்ய நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என ட்வீட் செய்து மல்லிகார்ஜுனே கார்கேவுடன் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் கைகோர்த்து நிற்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback