Breaking News

இந்த வருடத்தின் முதல் சந்திரகிரகணம் இன்று எப்பொழுது ஆரம்பிக்கின்றது முழு விவரம்

அட்மின் மீடியா
0

2023ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5ஆம் தேதியான இன்று நடைபெற உள்ளது, இது முழு சந்திர கிரகணமாக இருக்காது. அதற்கு பதிலாக பெனும்பரல் சந்திர கிரணமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது



சந்திர கிரகணத்தில் மொத்தம் மூன்று வகைகள் 

1 .முழு சந்திர கிரகணம், 

2.பாதி சந்திர கிரகணம் 

3. பெனும்பரல் சந்திர கிரகணம்.

பெனும்பரல் சந்திர கிரகணம் என்றால் என்ன

பூமியின் உள்நிழல் ஆங்கிலத்தில் 'umbra' என்றும், புறநிழல் ஆங்கிலத்தில் 'penumbra' என்றும் அழைக்கப்படுகிறது. 

கிரகணத்திற்கு முன், சந்திரன் பூமியின் புற நிழல் பகுதியில் நுழைகிறது, இதுவே புறநிழல் (Penumbra) சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. புறநிழல் கிரகணத்தின்போது , சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை.பெனும்பரல் சந்திர கிரகணத்தில் சந்திரனின் வடிவத்தில் காணக்கூடிய வகையில் எவ்வித மாற்றமும் இருக்காது. ஆனால் அதன் நிறம் வெளிர் பழுப்பு நிறமாக இருப்பதை காணமுடியும்.



வானவியலின் அடிப்படையில்சந்திர கிரகணம் என்றால் என்ன

சூரியன், பூமி, சந்திரன்., இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் உண்டாகிறது. அந்த நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என்கிறோம். சூரியின் வெளிச்சம் இல்லாததால் அந்த நேரத்தில் நிலவு தெரியாது. 

இதே போல், சூரியனை நிலவு கடந்து செல்லும் போது, சிறிய அளவில் சூரியன் மறைக்கப்படுகிறது. இதை சூரிய கிரகணம் என்கிறோம்.


எங்கெங்கு தெரியும் யாரால் பார்க்க முடியும்

வானம் தெளிவாக இருக்கும்பட்சத்தில் இந்தியா முழுவதில் இருந்து பார்க்க முடியும். இந்தியா தவிர்த்து ஆசியாவின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா, ரஷ்யா, வட ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளிலும் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.எனினு, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் இருந்து இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது.

சந்திர கிரகணத்தை நாம் நமது வெறும் கண்களால் கூட பார்க்கலாம்.

இந்திய நேரப்படி இன்று இரவு 8.44 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 01.01 வரை இந்த கிரகணம் நிகழக்கூடும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிகழும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback