Breaking News

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட துபாய் கடற்கரை வைரல் புகைப்படம்

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல்நெயாதி கடந்த புதன்கிழமையன்று சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து துபாயின் அடையாள சின்னங்களில் ஒன்றான பாம் ஜுமைராவினை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 



கடந்த சிலநாட்களுக்கு முன்பு விண்வெளி நடையை நிகழ்த்திய முதல் அரபு நாட்டவர் எனும் சாதனை படைத்தவர் விண்வெளி வீரர் சுல்தான் அல்நெயாதி, பூமியில் இருந்து 400 கிமீ உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட துபாய் கடற்கரையின் இரவு காட்சியை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த அற்புதமான புகைப்படத்தில் துபாய் கடற்கரையில் உள்ள அட்லாண்டிஸ், தி பாம், ஃபைவ் பாம் ஜூமைரா ஹோட்டல், ஜுமைரா ஜபீல் சாரே மற்றும் சமீபத்தில் திறக்கப்பட்ட அட்லாண்டிஸ் தி ராயல் உள்ளிட்ட துபாய் எமிரேட்டின் சில சிறந்த ஆடம்பர ரிசார்ட்டுகள் அவர் எடுத்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது,

புகைப்படம் பார்க்க:-

 https://twitter.com/Astro_Alneyadi/status/1653736514885394438

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback