Breaking News

ஏடிஎம் கொள்ளையனை துப்பாக்கி முனையில் ஹரியானாவில் கைது செய்த தமிழக போலிசார் வீடியோ

அட்மின் மீடியா
0

திருவண்ணாமலையில் பிப்ரவரி 12 ஆம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் ரூ 72 லட்சம் கொள்ளை போன சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை ஹரியானாவில் தமிழக போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.



கடந்த பிப்ரவரி மாதம் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம் மையங்களில் காஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.72.79 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது வடமாநில கொள்ளைக் கும்பல். இந்த வழக்கில்  9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது

இந்நிலையில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி ஆசிப் ஜாவேத் தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

ஏடிஎம் கொள்ளை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம், 3 கார்கள், ஒரு கன்டெய்னர் லாரி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Sun46982817Shan/status/1654457700108107776

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback