மாணவ மாணவிகள் பேருந்தில் பயணம் செய்ய பஸ் பாஸ் தேவையில்லை போக்குவரத்துத்துறை உத்தரவு.
கோடை விடுமுறை முடிந்துபள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும் தூய்மை பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசு பள்ளிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக், ஐடிஐ ஆகிய கல்வி நிலையங்களில் படிக்கும் ம்ாண மாணவிகள் பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம். அதேபோல் சீருடை அணிந்திருந்து அல்லது பள்ளி, கல்லூரி அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பாஸ் இல்லை என பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் நடத்துநர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்