Breaking News

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த கோவளத்தை சேர்ந்த தமிழக இளைஞர் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை அடுத்த கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். 





கோவளத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகர் (எ) குட்டி என்பவர் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் பயணத்தைத் தொடங்கி 8,850 மீட்டர் உயரத்தை நேற்று (மே 19) அதிகாலை 5.30 மணியளவில் அடைந்துள்ளார். ஒரு மாதம் கடுமையான குளிர், சறுக்கல்கள் என பல தடைகளைத் தாண்டி விடாமுயற்சியுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி, பேஸ்கேம்ப்க்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளார்.

இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு ஊட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழர் என்ற சாதனையை படைத்தார். இதையடுத்து, எவரெஸ்ட் உச்சியை ஏறி சாதனை படைத்த இரண்டாவது தமிழர் என்ற பெருமையப் பெற்றுள்ளார் கோவளத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகர் 

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்  ராஜசேகரை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள். அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய Everest சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback