Breaking News

நிலவின் மிகத் தெளிவான வீடியோ வெளியிட்ட புகைப்படக் கலைஞர்..! வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

ஆண்ட்ரூ மெக்கார்த்தி என்ற வானியற்பியலாளர் நிலவின் மிகத் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.



ஆண்ட்ரூ மெக்கார்த்தி என்ற வானியற்பியலாளர் ஒருவர் நிலவின் மிகத் தெளிவான புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அவர் நிலவின் முழு அளவிலான புகைப்படத்தை உருவாக்க இரண்டு தொலைநோக்கிகள் மற்றும் 2,80,000 தனிப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.தற்பொழுது அவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் ஜிகாபிக்சலுக்கும் மேல் உள்ளது.

மே 11, 2023 அன்று, புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ மெக்கார்த்தி சந்திரனின் படத்தை முழு விவரமாக வெளியிட்டார்,

சந்திரனின் வெவ்வேறு இடங்களில்  இரு லட்சத்து எண்பதாயிரத்திற்கும் அதிகமான புகைப்படங்களைப் படம்பிடித்து அவற்றை ஒன்றாக இணைத்தது உருவாக்கியுள்ளார்

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த புகைப்படம் உதவும் என கூறப்படுகிறது.

வீடியோ பார்க்க:

https://twitter.com/AJamesMcCarthy/status/1656656268067770369

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback