Breaking News

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 38 பெண்களை மீட்கும் வீடியோ என பரவும் செய்தி உண்மையா ISIS rescue of 38 women from India and Bangladesh true?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதிகளின் கொட்டகையை Syria நாட்டு ராணுவம் கைப்பற்றி, அங்கு பாலியலுக்காக இரும்பு செயினில் கட்டப்படிருந்த 38 இந்திய மற்றும் வங்கதேச அடிமை பெண்களை காப்பாற்ற்றினர். கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் சொன்னது எவ்வளவு உண்மையாக உள்ளது என தோன்றுகிறது.என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் 


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சிரியாவில் கடந்த 06.11.2022 ம் ஆண்டு நடந்தது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ  குறித்து சிரியா ஜனநாயகப் படைகள்  SDF  இன் யூ டியூப் சேனலில் கடந்த 06.11.2022 அன்று பதிவிட்டுள்ளது

அந்த வீடியோ தலைப்பில்  பெண்கள் பாதுகாப்பு பிரிவுகள் மூலம் அல்-ஹவ்ல் முகாமிலிருந்து நான்கு பெண்களை விடுவித்து என அரபு மொழியில் உள்ளது 

SDF என்பது அமெரிக்க ஆதரவில் 2015 ம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவில்  உள்நாட்டுப் போரின் போது உருவாக்கப்பட்ட படைகளின் கூட்டணியாகும் 

SDF மதச்சார்பற்ற , ஜனநாயக மற்றும் கூட்டாட்சி சிரியாவை உருவாக்குவதற்குப் போராடுவதாக கூறுகிறது 

SDF சிரியாவின் டமாஸ்கஸின் அல்-ஹோல் முகாமிலிருந்து ISIS தொடர்புடைய பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளை Operation Security and Humanity என்ற ஆப்ரேஷன் மீட்டது அப்போது SDF வீரர்களால் பலர் கைது செய்யப்பட்டார்கள் என்று ரிபப்ளிக் வேல்டு செய்தியில் கூறியுள்ளது

மேலும் மீட்கப்பட்டவர்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என எங்கும் குறிப்பிடப்படவில்லை அப்படி இருந்திருந்தால் இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கும் அப்படி ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என தேடுகையில் அப்படி ஏதும் செய்தி வெளியாக வில்லை

முடிவு:-

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=pG-NAXmCsmg

https://www.republicworld.com/world-news/us-news/us-backed-sdf-forces-free-women-from-isis-linked-al-hol-camp-in-covert-military-op-articleshow.html

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback