Breaking News

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.36 கோடி சொத்துக்கள் முடக்கம் அமலாகத்துறை நடவடிக்கை

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சத்தையும் அமலாக்கத் துறை முடக்கியிருக்கிறது.


இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின் படி 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களையும், அவரது வங்கி கணக்கில் உள்ள 36.3 லட்சம் ரூபாயையும் முடக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னணி சினிமா பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா, கல்லல் குரூப்ஸ் மற்றும் , தமிழக அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பெயரில் உள்ள அறக்கட்டளை நிா்வாகியும், வழக்குரைஞருமான பாபுவுக்கு சொந்தமான எழும்பூா் எத்திராஜ் கல்லூரி சாலையில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா். 

சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.அமலாக்கத் துறையினா் விடுத்த அழைப்பை ஏற்று பாபு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்

மேலும் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நேற்றைய தினம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.36 கோடி சொத்துக்கள் முடக்கம் அமலாகத்துறை நடவடிக்கை

அமலாக்கத்தூறை அறிவிப்பு:-

https://twitter.com/dir_ed/status/1662396565783457793

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback