Breaking News

சட்டவிரோத கடன் வழங்கும் 221 ஆப்களுக்கு தடை - தமிழக சைபர் கிரைம் அதிரடி

அட்மின் மீடியா
0

சட்டவிரோத கடன் வழங்கும் 221 ஆப்களுக்கு தடை - தமிழக சைபர் கிரைம் அதிரடி

தமிழக சைபர் கிரைம் வெளியிட்ட அறிக்கையில் 

டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில், தமிழக ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், முதலமைச்சர் மற்றும் ஆளூநர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் யூடியூப்பில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை தடை செய்ய யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான கடன் செயலிகளால் தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

221 சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, அந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் 61 கடன் செயலிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளத்தில் நடப்பாண்டில் 40 சட்டவிரோத பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில், கூறப்பட்டுள்ளது.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback