கால்வாயில் கட்டுக்கட்டாக ரூ.2000, 500 நோட்டுகள் அள்ளிச் சென்ற பொதுமக்கள் - வைரல் வீடியோ
பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ரோஹ்தாஸ் மாவட்டத்தின் மொராபாத் கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் ரூ.200, ரூ.500 நோட்டுகள் கொட்டிக்கிடக்கும் தகவல் பரவியது அதனை எடுப்பதற்கு ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.
பணக்கட்டுக்களை பார்த்து கழிவு நீர் என்றும் பாராமல் அதில் இறங்கி பணத்தை அள்ளத் தொடங்கினர். சாக்கடைக்குள் இறங்கியவர்கள் 2000, 500, 100 ரூபாய் நோட்டுகளை அள்ளிச் சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். கழிவுநீரில் ரூபாய் நோட்டுகளை வீசியவர்கள் யார் என்றும், அதன் உண்மைத்தன்மை குறித்தும் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரூபாய் நோட்டுகளை எடுக்க கழிவுநீரில் பொதுமக்கள் சிலர், குதித்து எடுத்து செல்கின்றனர்.அதிகாலை நேரத்தில் வாகனத்தில் வந்த சிலர் அந்த பண மூட்டையை கால்வாய்க்குள் வீசி சென்றதாகக் கூறப்படுகிறது.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள்