வாட்சப்பில் அனுப்பிய மெசேஜ்ஜை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யலாம் முழு விவரம்
வாட்ஸ் அப்பில் நீங்கள் அனுப்பிய செய்திகளை 15 நிமிடத்திற்குள் திருத்தம் செய்யலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளதன்அதன்படி வாட்ஸ் அப் செயலியில் நீங்கள் அனுப்பிய செய்திகளை 15 நிமிடத்திற்குள் திருத்தம் செய்யலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் செய்தியை எடிட் செய்யும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்பில் பயனாளர்களை கவரும் விதமாக அடுத்தடுத்து பல்வேறு புதிய அப்டேட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த அப்டேட்கள் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்
தற்போது நாம் வாட்ஸ் அப்பில் ஏற்கனவே அனுப்பிய மெசஜை குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் அனுப்பிய மெசஜ்களில் ஏதேனும் தவறு இருந்தால் நாம் அதனை டெலிட் செய்து விடலாம்.
இந்நிலையில் தற்போது நாம் அனுப்பிய மெசஜை டெலிட் செய்யாமல் அதனை எடிட் செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் நாம் அனுப்பிய மெசஜ்ஜை 15 நிமிடத்திற்குள் எடிட் செய்துகொள்ளலாம், இதனால் நாம் அனுப்பிய மெசஜை டிலைட் செய்யும் அவசியம் இருக்காது
மேலும் தற்போது பார்வேர்ட் மெசேஜ்களில் எடிட் செய்யும் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சத்தின் மூலம் வாட்ஸ்அப்பில் அனுப்பும் செய்திகளை எடிட் செய்ய முடியும். ஆனால் வேறு சாதனத்திலிருந்து அனுப்பப்பட்ட செய்தியை உங்களால் திருத்த முடியாது.இதன்மூலம் செய்தியைத் தவறாக அனுப்பிவிட்டால் அடுத்த 15 நிமிடத்துக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம். தற்பொழுது இந்த அம்சம் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
எடிட் செய்வது எப்படி:-
தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனுக்கு (WhatsApp Beta Version) வந்துள்ளது
நாம் எந்த மெசஜை எடிட் செய்யவேண்டுமோ அந்த மெசஜை செலக்ட் செய்து த்ரீ டாட் உள்ள எடிட் பட்டனை கிளிக் செய்து நாம் அனுப்பிய மெசேஜை எத்தனை முறை எடிட் செய்யலாம்
அதாவது ஒரு மெசேஜை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தலாம். ஆனால், குறிப்பிட்ட மெசேஜை அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் மட்டுமே அதை செய்ய முடியும்.
Tags: தொழில்நுட்பம்