Breaking News

12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான அட்டவணை முழு விவரம்

அட்மின் மீடியா
0

12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது அரசுத் தேர்வுகள் இயக்ககம்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு துணைத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. 

ஜூன் 19-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

அதன்படி, 19, 20, 21, 22, 23 ,24, 25, 26 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை 12-ஆம் வகுப்பு துணை தேர்வு நடைபெற உள்ளது.

இதுபோன்று, ஜூன் 27 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை 11-ஆம் வகுப்பு துணை நடைபெறும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன்படி, 27, 28, 30, 1, 3, 4, 5 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மத்திய 1.15 மணி வரை 11ம் வகுப்பு துணை தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback