12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்துகொள்வது எப்படி......tn board result | 12th result 2023 tamil nadu
தமிழகத்தில் 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 8 ம்தேதி வெளியாகும்
தமிழகத்தில் பிளஸ் 12 பொதுத்தேர்வுகள் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று தற்போது மதிப்பெண்கள் இனையத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பள்ளிகல்விதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
மேல்நிலை இரண்டாமாண்டு (2)-மார்ச்/ஏப்ரல் 2023- பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை,
http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://dge.tn.nic.in
தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
12 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள பள்ளிகல்விதுறை அதிகாரபூர்வ ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்
https://play.google.com/store/apps/details?id=io.cordova.myappac191c
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்