12 ம் வகுப்பு படித்தவர்கள் வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.! tamilnadu agriculture university
தமிழகத்தில் உள்ள வேளாண்மை பல்கலைகழத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
விண்ணப்பிக்க:-
https://tnau.ucanapply.com/univer/public/secure?app_id=UElZMDAwMDA2NQ==
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2023-24 -ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு இன்று முதல் ஜூன் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 17 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளின் மூலம் இளம் அறிவியல் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, உணவு முறை, பட்டு வளர்ப்பு, வேளாண்மைப் பொறியியல், உயிரி தொழில்நுட்பவியல், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பட்டப் படிப்புகள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.
பொதுப்பிரிவு விண்ணப்ப கட்டணம் ரூ.500 எனவும், பட்டியலினத்தவருக்கு கட்டணம் ரூ.250 என தெரிவிக்கப்ட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தையும் இணையதளம் மூலமே செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:-
https://d1cmkr5tdoeyjk.cloudfront.net/TNAU+UG+Admission+Brochure.pdf
Tags: கல்வி செய்திகள்