10 ரூபாய்க்கு காலையில் டிபன் மதியம் அன்லிமிட்டெட் சாப்பாடு இரவு டிபன் வழங்கும் ஆற்றல் பவுண்டேஷன் அசத்தல் ஹோட்டல்
ஈரோட்டில் ஆற்றல் பவுண்டேசன் சார்பில் அதன் நிறுவனர் அசோக்குமார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ஆற்றல் பவுண்டேஷனின் அடுத்த கட்டமாக ஆற்றல் உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலை மதியம் , இரவு என மூன்று வேளையும் ஆற்றல் பவுண்டேசன் சார்பில் தரமான சுவையான, அன்லிமிடெட் உணவு வழங்கப்படுகிறது.
காலை 8 மணி முதல் 10 மணி வரை
இடலி, சாம்பார் மற்றும் சட்னி 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2மணி வரை
சாதம், சாம்பார், மோர், ஊறுகாய், பொறியல் ஆகியவை வெறும் 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
இரவு 7மணி முதல் 9 மணி வரை
இட்லி, சாம்பார் மற்றும் சட்னி 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சாப்பிடலாம்
Tags: தமிழக செய்திகள்