Breaking News

பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை மன்னிக்கவே மாட்டேன் சப் இன்ஸ்பெக்டர் வீடியோ

அட்மின் மீடியா
0

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கக் கோரி பெற்றோர்களிடம் உரையாடும் திருவள்ளூர் மாவட்டம் தாலுக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர்பரமசிவம் பேசிய வீடியோ வைரல்

 


திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அந்தப் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்பதை கேள்வி பட்டு அங்கு சென்ற உதவி ஆய்வாளர் உங்க பிள்ளைகள் படிக்க என்ன உதவி வேண்டுமானாலும் காவல் நிலையம் வந்து என்னை பார்க்கலாம். 

இந்த பிள்ளை நாளைக்கு வளர்ந்து உங்களை பார்த்து கேள்வி கேட்கும். என்னையும் படிக்க அனுப்பி இருக்கலாம்மா? என்று அப்ப என்ன பன்னுனீங்க 

ிருடனை கூட விட்டு விடுவேன். கொலைக்காரனைக் கூட விட்டு விடுவேன். அவங்களை இன்னிக்கி இல்ல நாளைக்கு பிடிச்சுடுவேன். இது வந்து ஒரு குழந்தைக்கு விஷம் ஊற்றுகிற மாதிரி. சமுதாயத்தை கருவறுகிற மாதிரி. பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பாமல் இருப்பது. தயவுசெய்து பிள்ளையை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்கள் என்று அவர் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது

இந்நிஅலியில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்திய பென்னாலூர் காவல் உதவி ஆய்வாளருக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் 

குற்றங்களை தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல, நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்தை வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உதவி ஆய்வாளர் பேசிய வீடியோ பார்க்க:-

https://twitter.com/ptsnewstamil/status/1647960547730522112

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback