Breaking News

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

அட்மின் மீடியா
0

திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுமானத்தை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம் எனவும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறவும், பயன்படுத்தவும் அனுமதியில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். விளையாட்டு மைதானங்களில் சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளில் மட்டும் மதுபானம் பரிமாற அனுமதிக்கப்படும் என்றும்

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மதுபானம் அனுமதி நடைமுறையில் உள்ளது என தனது பேட்டியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback