Breaking News

பிரதமர் மோடி சென்னை வருகை சாலை போக்குவரத்தில் மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை காரணமாக சென்னையில் போக்குவரத்தில் பல  மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.



பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார், முக்கியமாக சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார் மேலும் சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார். அதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

லேங்கஸ் கார்டன் சாலையில் இருந்து காந்தி இர்வின் மேம்பாலத்திற்கு வரும் கனரக வாகனங்கள் ஈவிஆர் சாலையை அடைய உடுப்பி பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.

அனைத்து கனரக வாகனங்களும் வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக சென்னைக்கு செல்லலாம்

கிரீன்வேஸ் சாலையில் இருந்து வரப்படும் கனரக வாகனங்கள் மந்தவெளி நோக்கி திருப்பி விடப்படும்.

காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து வாகனங்கள் ஆர்.கே. சாலைக்கு திருப்பி விடப்படும். அங்கிருந்து நடேசன் சாலை சந்திப்பில் ஐஸ் ஹவுஸ், ரத்னா கபே, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பு வழியாக தொழிலாளர் சிலை அல்லது அண்ணாசாலைக்கு வலதுபுறம் திரும்பி செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் வானங்கள் தொழிலாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலையில் அண்ணாசாலை நோக்கி அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும். வாகனங்கள் போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா பாயின்ட் வழியாக அண்ணாசாலை நோக்கி கொடி ஊழியர்கள் சாலையில் திருப்பி விடப்படலாம் ன அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனைவரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வழியே திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சிலை முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலான சாலையில் கூடுதல் சோதனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback