Breaking News

கோமியம் குடிப்பது உடலுக்கு நல்லது அல்ல அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

அட்மின் மீடியா
0

பசு, எருமை மாடுகளின் சிறுநீரை குடிப்பது மனிதர்களுக்கு தீக்கு விளைவிக்கும் என்ற தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. 


உத்தரப்பிரதேச மாநிலம், பெய்ரலியில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில்  பணியாற்றிவரும் போஜ் ராஜ் சிங் என்பவரின் தலைமையில், மூன்று பி.எச்டி மாணவர்கள் பசு மற்றும் எருமை மாடுகளின் கோமியம் குறித்த ஆராய்ச்சி நடத்தினர்.ஆராய்ச்சி முடிவில், பசு மற்றும் எருமை கோமியங்களில் மனிதர்கள் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் பசு, எருமை மாட்டின் சிறுநீரை மனிதர்கள் குடிப்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.பசு மற்றும் எருமை மாட்டின் சிறுநீரில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக எருமை மாட்டின் சிறுநீரில் அதிகளவு பாக்டீரியாக்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தப் பாக்டீரியாக்கள் மனித உடலினுள் சென்றால், அது வயிற்றில் தொற்றும் மற்றும் வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மனிதர்கள் கோமியத்தை நேரடியாக உட்கொள்வது உடல்நலனுக்கு உகந்தது அல்ல என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

காய்ச்சி வடிகட்டிய சிறுநீரில் தொற்று பாக்டீரியாக்கள் இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர். நாங்கள் அதை மேலும் ஆய்வு செய்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்கள்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback