டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு அதிர்ச்சி வீடியோ | ஒரு பெண் , மற்றும் வழக்கறிஞர் படுகாயம்…முழு விவரம்
டெல்லி சாகெத் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று விசாரணைக்கு வந்த பெண் மீது வழக்கறிஞர்கள் போன்று உடையணிந்து வந்த ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார் பலத்த காயமடைந்த பெண்ணை அங்கிருந்த போலீஸ் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது இந்த சம்பவத்தால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சாகேத் நீதிமன்ற வளாகத்தில் காலை 10:30 மணி அளவில் நீதிமன்ற வளாகத்தில் தனது வழக்கறிஞருடன் ஒரு பெண் நின்றிருந்தபோது வழக்கறிஞர்கள் போன்று உடையணிந்து வந்த ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார் அவனிடமிருந்து தப்பிக்க அந்த பெண் அங்கும் இங்கும் ஓடிய போதும் துரத்திச் சென்று அடுத்தடுத்து 4 முறை துப்பாக்கியால் சுட்டார். 5 ரவுண்டு நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் மற்றும் வழக்கறிஞர் ஒருவர் தோட்டா காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியிலும், அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவருக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காமேஷ்வர் பிரசாத் சிங் என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வழக்கறிஞர் என்றும், ஆனால் அவர் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்த நிலையில், அவரது பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/ysathishreddy/status/1649347421376479235
Tags: இந்திய செய்திகள்