Breaking News

பஸ், ரயில், மெட்ரோவுக்கு ஒரே அட்டை சிங்கார சென்னை கார்டை ஆன்லைனில் பெறுவது எப்படி?

அட்மின் மீடியா
0

பஸ், ரயில், மெட்ரோவுக்கு ஒரே அட்டை சிங்கார சென்னை கார்டை ஆன்லைனில் பெறுவது எப்படி?


சிங்கார சென்னை கார்டு என்றால் என்ன:-

சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டு போக்குவரத்திற்க்கு பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ஆகிய மூன்று வசதி உள்ளது அதில் மக்கள் பயனம் செய்ய அனைத்திற்க்கும் தனி தனியாக பயனசீட்டு வாங்கவேண்டும்

இந்நிலையில் மக்கள் போக்குவரத்து பயணங்களை எளிமையாக்க சிங்காரச் சென்னை அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிங்கார சென்னை கார்டை பயன்படுத்தி பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ஆகிய மூன்றிற்கும் பயணசீட்டாக ஒரே கார்டை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைக்கு இந்த சென்னை கார்டை மெட்ரோவில் பயணம் செய்ய மட்டுமே பயன்படுத்த இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், பேருந்து புறநகர் ரயில்வே, சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சிட்டி மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிரிவுகளில் பணம் செலுத்த வாடிக்கையாளர்கள் இந்த ஒற்றை அட்டையைப் பயன்படுத்தலாம்.  

இனி வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

சிங்கார சென்னை கார்டை பெற விண்ணப்பிப்பது எப்படி:-

https://transit.sbi/swift-eform/custCardLink?cardLink=cmrl 

முதலில் மேல் உள்ள இணையப் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அடுத்து அதில் உங்களுடைய பெயர், உங்களுடைய மொபைல் எண், பிறந்த தேதி, பான் அட்டை எண் ஆகியவற்றை பதிவு செய்யுங்கள்

அடுத்து உங்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகிய அடையாள அட்டைகளில் ஏதேனினும் ஒன்றை தேர்வு செய்து, அதன் விவரங்களை பதிவு செய்யுங்கள்

அடுத்து Submit கொடுங்கள் உங்களுடைய சிங்கார சென்னை அடையாள அட்டையின் விண்ணப்பம் பதிவு செய்யப்படும்

 

ிங்கார சென்னை கார்டு சிறப்பம்சம்:-

ஸ்டேட் பேங்க் அப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் இதனை டெபிட் கார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்த சிங்கார சென்னை அட்டையை மும்பை, பெங்களூரு, டெல்லி உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோக்களிலும் பயன்படுத்த முடியும்.

குறிப்பிட்ட தொகையை ரீசார்ஜ் செய்து அட்டையை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். மெட்ரோவோ, லோக்கல் ரயிலோ அல்லது பேருந்தோ அங்கு பொருத்தப்பட்டிருக்கும் மெஷினில் ஸ்வைப் செய்தால் பயணத்துக்கான கட்டணம் எடுத்துக்கொள்ளப்படும். இதன்மூலம் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் காத்திருக்க தேவையில்லை. கார்டில் உள்ள பணம் காலியானதும் மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.இதுபோக, சிங்கார சென்னை அட்டையை டெபிட் கார்டு ஆகவும் பயன்படுத்த முடியும். எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் இதனை டெபிட் கார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback