Breaking News

திமுக அமைச்சர்கள் ஊழல் பட்டியல் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பார்க்க

அட்மின் மீடியா
0

திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் ஊழல் தொடர்பான வீடியோவை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்

தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை தற்போதைய திமுக ஆட்சி மற்றும் முந்தைய (2006-2011) திமுக அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்களை ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பலப்படுத்துவேன் என்று கூறி இருந்தார். 

அதன்படி இன்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.அதில்

தனது ரஃபேல் வாட்ச் பில்லை காண்பித்தார். ரஃபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன். எனது வங்கி கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்தும் விவரங்களையும் வெளியிடுகிறேன் என தெரிவித்தார். 

நண்பரிடம் ரஃபேல் வாட்ச்சை ரூ.3 லட்சம் கொடுத்து வாங்கியதாக அதற்கான பில்லை காண்பித்தார். கோவை ஜிம்சன் நிறுவனத்தில் ரஃபேல் வாட்ச்சை வாங்கி கேரளாவின் சேரலாதன் எனக்கு கொடுத்ததாகவும், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வாட்சை வாங்கிய சேரலாதன் ராமகிருஷ்ணன் மே மாதம் அதை என்னிடம் கொடுத்தார் எனவும் கூறினார்

மேலும் திமுக பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டார். 

திமுகவினரின் சொத்து பட்டியல் தொடர்பான ஆதாரங்களுடன் சிபிஐ-யிடம் புகார் அளிக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

 வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=TDKQIpkUHIY

Tags: அரசியல் செய்திகள் இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback